பிக் பாஸ்-ஐ தடை செய்யவேண்டும்.. தவாக தலைவர் வலியுறுத்தல்

பிக் பாஸ்-ஐ தடை செய்யவேண்டும்.. தவாக தலைவர் வலியுறுத்தல்

இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில்தான் பிக் பாஸ் 9 தமிழ் துவங்கியது.

20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த நிலையில், கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். நந்தினி என்பவர் தானாகவே முன் வந்த வீட்டிலிருந்து வெளியேறினார். பிரவீன் காந்தி குறைவான வாக்குகளை பெற்றதன் காரணமாக வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ்-ஐ தடை செய்யவேண்டும்.. தவாக தலைவர் வலியுறுத்தல் | Velmurugan Says Bigg Boss Need To Be Banned

இதை தொடர்ந்து இந்த வாரம் வீட்டிற்குள் உள்ள 18 போட்டியாளர்களின் யார் வெளியேறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என தமிழக சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் (தவாக) தலைவருமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

பிக் பாஸ்-ஐ தடை செய்யவேண்டும்.. தவாக தலைவர் வலியுறுத்தல் | Velmurugan Says Bigg Boss Need To Be Banned

"பிக் பாஸ், சண்டை, குரோதம், ஆபாசம், பொய், துரோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் களமாகவே இருக்கிறது. இவை எதுவும் தமிழ் சமூகத்தின் பாரம்பரிய அடையாளங்கள் அல்ல. குறிப்பாக தமிழக குடும்பத்தின் அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல் ஆகிய விழுமியங்களை அழிக்கும் இந்த நிகழ்ச்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்" என கூறியிருக்கிறார். 

LATEST News

Trending News