ஆதிரையின் ஆபாச பேச்சு.. என்னங்க அமுக்கிடுவேன்னு எல்லாம் சொல்றாங்க.. எல்லாமே 18+.. ச்சீ மோசம்!

ஆதிரையின் ஆபாச பேச்சு.. என்னங்க அமுக்கிடுவேன்னு எல்லாம் சொல்றாங்க.. எல்லாமே 18+.. ச்சீ மோசம்!

பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நாளுக்கு நாள் மிகவும் மோசமாக போய்க்கொண்டு உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே போட்டியாளர்களும் ரசிகர்களுமே மிகவும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தங்களது கருத்துக்களை கவலையுடன் வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர் ஆதிரை, சக ஆண் போட்டியாளரை நோக்கி மிகவும் ஆபாசமாக பேசியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

நேற்றைய எபிசோடில் அதாவது அக்டோபர் 14ஆம் தேதி எபிசோடில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் தரப்பில் இருந்து போட்டி வைக்கப்பட்டது. அதில் லக்சுரி வீட்டில் இருப்பவர்களுக்கு சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வழங்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இப்படி இருக்கும்போது, அந்த போட்டி நடைபெறும் போது வி.ஜே. பார்வதி, போட்டியாளர் எஃப்.ஜேவை தொடக்கூடாத இடத்தில் தொட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக எஃப்.ஜேவும் சபரியும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

இது மட்டும் இல்லாமல், அந்த கான்வர்சேஷன் முடியும் போது, சபரி, எஃப்.ஜேவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஆறுதல் படுத்தினார். மேலும் எஃப்.ஜே அழவும் செய்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் இது போன்ற சம்பவம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்திற்கு வந்துவிட்டார்கள். சரி இது தொடர்பாக வீக் எண்டில் ஏதாவது விவாதிக்கப்படுகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்நிலையில் போட்டியாளர் ஆதிரை, சபரியை பார்த்து, "அவனுக்கு ( எஃப்.ஜே) கேம்ல நடந்தது, உனக்கு நேர்ல நடந்திடும்... போய்டு" என்கிறார். அதற்கு சபரி, " நீ கொஞ்சம் கொச்சையாக பேசுகிறாய், ரொம்பவும் பச்சையா பேசுறா" என்கிறார். அடுத்து ஆதிரை சிரித்துக் கொண்டே, " சத்தியமா சொல்கிறேன், யோசிக்கவே மாட்டேன் புடுச்சுடுவேன்" என்கிறார். அடுத்து சபரியோ, " ஏய்.... பாஸ் இங்க பசங்களுக்கு இங்க பாதுகாப்பு இல்லை" என்பது போல கூறுகிறார். இதைக் கேட்ட ரம்யா ஜோ, ஆதிரையைப் பார்த்து, " ஏய்... என்னடி, புடுச்சுடுவேன்.. அமுக்கிடுவேன்னு சொல்லிட்டு இருக்க" என்று கூறுகிறார்.

இந்த ஆபாச உரையாடல் தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்து உள்ள இணைய வாசி, " ஆதிரை எதைப் பிடித்து விடுவேன் என்று கூறுகிறார் என்று தெரிகிறதா? எல்லாமே 18+. எஃப்.ஜேவுக்கு என்ன நடந்ததாக கூறப்பட்டதோ அதைத்தான் ஆதிரை கூறுகிறார் என்று கேப்ஷன் இட்டுள்ளார். இதைப் பார்த்த இணையவாசிகள் பலர் அவர்களின் உரையாடலையும், ஆதிரையையும் மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். ஆதிரையின் இந்த பேச்சு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது.

இது தொடர்பாக விஜய் சேதுபதி வார இறுதியில் கேள்வி எழுப்பி, கண்டிப்பாரா, கடுமையாக திட்டுவாரா? அல்லது எச்சரிப்பாரா? ஆபாசமாக பேசும் அவரை போட்டியில் இருந்து வெளியேற்றுவாரா என்று எல்லாம் ரசிகர்கள் மனதில் கேள்வியாக உள்ளது. இந்த வாரம் முழுவதும் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் பலரையும் ரைய்டு விடுவார்கள் என்றுதான் ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்ப்பாக உள்ளது. என்ன நடக்கிறது என்பதை வார இறுதியில் காணலாம்.

LATEST News

Trending News