காதல் முறிவால், மது குடிக்க.. நடிகை ராஷ்மிகா ஓப்பனாக சொல்லிட்டாரே!
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
சில தினங்களுக்கு முன் தான் இவர்கள் நிச்சயம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், படத்தின் புரமோஷனின்போது ராஷ்மிகா காதல் முறிவு குறித்து சில சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அதில், " காதல் முறிவால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
எங்கள் வலியை வெளிப்படுத்த உங்களைப் போல தாடி வளர்க்க முடியாது, மது குடிக்க முடியாது. பெண்கள் உள்ளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், அதை வெளியே வெளிப்படுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.