என்ன கன்றாவி.. குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ராஷ்மிகா.. டிரெண்டாகும் "பாய்சன் பேபி" பாடல்!
ஆயுஷ்மான் குரானா நடிக்கும் "தம்மா" திரைப்படத்தில், மலைக்கா அரோரா "பாய்சன் பேபி" என்ற ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகும் மலைக்கா அரோரா மீண்டும் திரையில் பார்ப்பதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படத்தில், ராஷ்மிகாவும் படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
'தம்மா' திரைப்படத்தில் ஆயுஷ்மான் குரானா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திகில், நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தற்போது இப்படத்தில் இருந்து மலைகா அரோரா ஆடும "பாய்சன் பேபி" என்ற ஐட்டம் பாடல் வெளியாகி உள்ளது.
நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருந்த மலைக்கா அரோரா நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றி உள்ளார். இந்த "பாய்சன் பேபி" பாடல், மலைகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அவரின் கவர்ச்சியான தோற்றம் மற்றும் நடனம் அசைவுகளைப்பார்த்து ரசிகர்கள் வியந்து போனார்கள். "சய்யா சய்யா" மற்றும் "முன்னி பத்னாம் ஹுயி" போன்ற பாடல்களின் மூலம் பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த மலைக்கா, "பாய்சன் பேபி" மூலம் மீண்டும் தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். மலைக்கா "பாய்சன் பேபி" என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு கவர்ச்சியாக பாய்சன் பேபியாக இருக்கிறார்.
இந்த பாடலில் மலைக்கா அரோரா மட்டும் இல்லாமல், நடிகை ராஷ்மிகாவும் சிவப்பு புடவையில், சரக்கு அடித்துவிட்டு கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த பாடலைப்பார்த்த கோலிவுட் ரசிகர்கள், பாலிவுட்டில் கவர்ச்சி ஆட்டம், கோலிவுட்டில் ஹோம்லி ஹீரோயினா? என்ன கன்றாவிட இது என ராஷ்மிகாவை கடுமையாக திட்டி வருகின்றனர். மடோக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் "தம்மா" திரைப்படம் அக்டோபர் 21ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படம் நிச்சயம் வசூல் ரீதியாக சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.