மக்களோட முடிவு தப்பு தான்!! பிக்பாஸ் 9 வீட்டைவிட்டு வெளியேறியதும் ஆதிரை சொன்ன வார்த்தை..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 24 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் 3வது எலிமினேஷனாக ஆதிரை எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆதிரை வெளியேறியது ரசிகர்களுக்கு பலருக்கும் ஆறுதலாக இருந்ததாக இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆதிரை அளித்த பேட்டியில், சில விஷயங்களை பேசி மேலும் பார்வையாளர்களை வெறுப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.
அதில், நான் 2வது வாரம் கொஞ்சம் டவுன் ஆகிவிட்டேன், 3வது வாரத்தில் என்னை எல்லாவற்றிலும் சூப்பராக விளையாடினேன். நான் வெளியேறியதற்கு தகுதியானவள் இல்லை. மக்களோட முடிவு தப்புன்னு தான் சொல்லுவேன்.

என்னைவிட தகுதியில்லாத போட்டியாளர்கள் வீட்டில் இருக்கிறார்கள், அவர்களை எல்லாம் தூக்கிப்போடாமல், என்னை ஏன் தூக்கி வெளியில போட்டாங்கன்னு தெரியல. கலையரசன் நான் விளையாடியதை கூட அவர் பாதிக்கூட விளையாடி இருக்கமாட்டார்.
இப்போதுதான் ஆரம்பித்தாலும் பாதிதான், விளையாட்டை புரிஞ்சிக்காம இருகாருன்னு சொல்லுவேன். அவருக்கு பின் கம்ருதீன், தேவையில்லாத வார்த்தைகளை கொட்டுவார். அவங்க எல்லாம் இருக்கும்போது நான் வெளியே வந்தது என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ஆதிரை தெரிவித்துள்ளார்.