நடிப்பது என் Part time Job.. திருடுவது தான் என் வேலை.. கையும் களவுமாக சிக்கிய சீரியல் நடிகை!

நடிப்பது என் Part time Job.. திருடுவது தான் என் வேலை.. கையும் களவுமாக சிக்கிய சீரியல் நடிகை!

சீரியல், சினிமா என நிற்ககூட நேரமில்லாமல் பிசியாக நடித்து வந்த நடிகை ஒருவர், திருட்டு தொழிலில் ஈடுபட்டு, போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த நடிகை யார்? அந்த நடிகையின் பின்னணி என்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொல்கத்தாவில் உள்ள ஆதி பன்சலா பகுதியில் பெண் ஒருவர் நகைகளை வாங்கி இருக்கிறார். ஷாப்பிங் முடிந்து விட்டது தனது ஹேண்ட் பேக்கை பார்த்த போது, ஹேண்ட் பேக் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த ஹேண்ட் பேக்கில், இரண்டரை சவரணில் தாலி, மூன்று சவரனில் செயின், ஒன்பது கிராமில் 2 பிரேஸ்லெட்டுகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது.

நகையை பறி கொடுத்த பெண், உடனடியாக காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். உடனே வழக்கு பதிவு செய்த போலீசார். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பிக்பாக்கெட் அடித்தது பெண் என்பது தெரியவந்தது. ஆனால் முகம் சரியாக தெரியாததால், விசாரணை தீவிர படுத்தப்பட்டு அந்தப் பெண்ணின் உடை மற்றும் சில அடையாளங்களை வைத்து அந்த பகுதியில் இருக்கும் அனைத்து சிசிடிவிகளையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் நகைகளை திருடியது பிரபல நடிகை ரூபா தத்தா என்பது தெரியவந்தது.

பிரபல நடிகையான ரூபா தத்தா சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். ஜெய்மா வைஷ்ணா தேவி என்ற பாலிவுட் வெப் தொடரில் நடித்து இவர் புகழ் பெற்றார். 2010ல் வெளியாக 'கெல்லா ஃபட்டில்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதே போல 'சாத்தி' என்ற திரைப்படத்தில் நடித்து பெங்காலி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார் ரூபா தத்தா.

இந்நிலையில் தான் ரூபா ஆதி பன்சலா பகுதியில் கடந்த மாதம் ஒரு பெண் நகைகளை வாங்கிக் கொண்டு இருப்பதை பார்த்த ரூபா,அந்த ஹேண்ட் பேக்கை லாவகமாக பிக் பாக்கெட் அடித்துவிட்டு தப்பித்துவிட்டார். இதையடுத்து, பெண் போலீசார் ரூபாவின் நடவடிக்கைகளை கண்காணித்து பின்பு சரியான நேரத்தில் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பெண் ஒருவரி ஹேண்ட் பேக்கை பிக்பாக்கெட் அடித்த போது கையும் களவுமாக சிக்கியது தெரியவந்துள்ளது.

நடிகை ரூபா தத்தா, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளை குறித்து வைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்று நோட்டமிட்டு, யாரிடம் பணம் இருக்கிறது, யார் நகை வாங்குகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அவரிகளிடம் திருடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இதையடுத்து, நடிகை ரூபா தத்தாவிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்ட போலீசார் நடிகையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனார். பிரபல நடிகையாக இருந்தும் நடிப்பதை Part time Job ஆக வைத்துக்கொண்டு திருடுவதை முழு நேரமாக வைத்திருக்கிறார் இந்த நடிகை. இந்த செய்தி தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News