இந்த வாரம் பிக் பாஸ் 9 டபுள் எலிமினேஷன்.. யார் யார் தெரியுமா
பிக் பாஸ் சீசன் 9ல் இருந்து இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும் கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்தபடி வைல்டு கார்டு என்ட்ரி நடந்தது.
இதில் திவ்யா, சாண்ட்ரா, பிரஜன், அமித் ஆகியோர் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்கள் வீட்டிற்க்குள் வந்தபின் ஆட்டம் இன்னும் சூடுபிடித்துள்ளது. இதில் சாண்ட்ரா மக்கள் மத்தியில் நல்ல கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்நிலையில், இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என கூறப்பட்ட நிலையில், அது யார் யார் என்கிற தகவல் வந்திருக்கிறது. துஷார் மற்றும் பிரவீன்ராஜ் ஆகிய இருவர்தான் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கின்றனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
முதலில் வேறொரு போட்டியாளர் தான் வெளியேற்றப்பட இருந்தாராம். ஆனால் கடைசி நேரத்தில் பிரவீன் ராஜ் தேர்வு செய்யப்பட்டு எலிமினேட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
