6 தலைமுறைக்கு சொத்து சேர்த்த 52 வயது நடிகை!! இன்னும் சிங்கிள் தான்..
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரேட் நடிகையாக திகழ்ந்து பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சாக்ஷி தன்வார். 2012 முதல் 2014 வரை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்ற சீரியலில் ஒன்றுதான் உள்ளம் கொள்ளை போகுதடா.

இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்தான் நடிகை சாக்ஷி தன்வார். ராஜஸ்தானின் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரியின் மகளான சாக்ஷி, சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கு தயாரானார். அவருடைய விருப்பம் என்பதை தாண்டி தந்தையின் விருப்பமாகவும் இருந்தது.
தந்தையின் கனவுகளை எட்டிப்பிடிக்க முயன்ற சாக்ஷி, தூர்தர்ஷனில் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஆடிஷனுக்கு நண்பரின் அழைப்பின் பேரில் 1998ல் சென்றார். அத்தேர்வில், நிகழ்ச்சி தொகுப்பாளராக சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார்.
பின் அவரின் திறமையால், கஹானி கர் கர் கி என்ற சீரியலில் மருமகள் ரோலில் நடித்தார் சாக்ஷி. இந்த சீரியல் 8 ஆண்டுகள் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. பின் 2011ல் உள்ளம் கொள்ளை போகுதடா என்ற சீரியலில் நடித்து மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

சின்னத்திரையை தாண்டி, தங்கல் படத்தில் அமீர்கானின் மனைவியாக நடித்தார். 2018ல் 9 மாதங்களே ஆன பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
ஆடம்பர செலவுகளை தவித்து தேவைக்கு மட்டும் செலவு செய்யும் சாக்ஷி தன்வார், 6 தலைமுறைக்கான சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார் என்று அவருடன் நடித்த நடிகர் ராம் கபூர் தெரிவித்துள்ளார். நடிகை சாக்ஷி தன்வாரின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.