தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த விஜய்.. ஜனநாயகன் ப்ரீ பிசினஸ் ரிப்போர்ட்
அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலகியுள்ளார் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவரவிருக்கும் ஜனநாயகன் படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட்டாகியுள்ளது. 50 மில்லியனுக்கும் மேல் Youtube-ல் பார்வையாளர்களை பெற்றுள்ளது தளபதி கச்சேரி பாடல். மேலும் இதை தொடர்ந்து வருகிற டிசம்பர் 27ஆம் தேதி ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது என அறிவித்துள்ளனர். விஜய்யின் கடைசி இசை வெளியீட்டு விழா கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில், தனது கடைசி படத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளார் விஜய். ஜனநாயகன் திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை ரூ. 105 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. அதுவும் ஒரே விநியோகஸ்தருக்கு தராமல், ஒவ்வொரு ஏரியாவையும் பிரித்து விற்றுள்ளனர்.

இதன்மூலம் இதன்மூலம் தமிழக திரையரங்க உரிமை மட்டுமே ரூ. 105 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய தொகைக்கு தமிழக திரையரங்க உரிமை விற்பனையானது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம் புதிய சாதனை படைத்துள்ளார் தளபதி விஜய்.