நான்கு நாட்களில் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

நான்கு நாட்களில் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கடந்த வாரம் தமிழ் சினிமாவிலிருந்து வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று மாஸ்க். கவின் மற்றும் ஆண்ட்ரியா முதல் முறையாக இணைந்து இப்படத்தில் நடித்திருந்தனர்.

நான்கு நாட்களில் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Mask Movie 4 Days Box Office Collection

அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இப்படத்தை இயக்க ஆண்ட்ரியா இப்படத்தை தயாரித்திருந்தார். மேலும் சார்லி, பவன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், நான்கு நாட்களில் மாஸ்க் படம் உலகளவில் ரூ. 6.1 கோடி வசூல் செய்துள்ளது.

நான்கு நாட்களில் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Mask Movie 4 Days Box Office Collection

முதல் மூன்று நாட்களுக்கு பின் நான்காவது நாளில் பாக்ஸ் ஆபிஸில் மாஸ்க் படம் சரிவை சந்தித்துள்ளது. இனி வரும் நாட்களில் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News