ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. ஒரு டிக்கெட் விலை இவ்வளவா?

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. ஒரு டிக்கெட் விலை இவ்வளவா?

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இது கடைசிப் படம் என்பதாலேயே ரசிகர்கள் படம் எப்படி இருக்க போகிறது என பார்க்க ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியா நாட்டில் நடத்த இருப்பதாக சமீபத்தில் படக்குழு அறிவித்து இருந்தது.

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. ஒரு டிக்கெட் விலை இவ்வளவா? | Jananayagan Audio Launch Shocking Ticket Prices

அனிருத் இசை கச்சேரியாகவே ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவை நடந்த உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேடை அருகில் 299 RM, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6400 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தூரமாக இருக்கும் இருக்கைகளுக்கு, குறைந்தபட்ச விலையாக 99RM (2100 இந்திய ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.  

Gallery

Gallery

LATEST News

Trending News