2-ஆம் திருமணம் செய்து கொண்ட சமந்தா!! கணவருக்கும் அவருக்கு இத்தனை வயது வித்தியாசமா?
இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும். நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் கீழ் சுபம் என்ற படத்தை தயாரித்து உள்ளார்.
நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
இவர்கள் ஜோடியாக வெளியில் செல்லும் போட்டோ, வீடியோ எல்லாம் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவரும் திடீரென திருமணம் செய்து அனைவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்நிலையில் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோருக்கு இடையே உள்ள வயது வித்தியாசம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 38 வயதான சமந்தா 46 வயதான ராஜ் நிடிமோரு அவர்களை திருமணம் செய்திருக்கிறார்.
இருவருக்கும் 8 வயது வித்தியாசமாம். கடந்த 2022ல் ஸ்யாமலி தே என்பவருடன் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்த ராஜ் நிடிமோரு சமந்தா இரண்டாம் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.