சங்கீதாவின் தந்தை இலங்கையை சேர்ந்தவரா? இவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இவர்களின் விவாகரத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், சங்கீதாவின் தந்தை குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.
பிரபல நடிகரும், அரசியல்கட்சி தலைவருமான நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்ட மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் மற்றும் சாஷா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
2021ம் ஆண்டு வரை ஒரே குடும்பமாக வாழ்ந்த வந்த விஜய் சங்கீதா பின்பு வெளியில் சேர்ந்து எந்தவொரு நிகழ்விற்கும் வருவதில்லை. சங்கீதா லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.
பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் படித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனு ஒன்றினை கொடுத்துள்ளார்.
சங்கீதா கொடுத்த புகார் மனுவில் விஜய்க்கும் தனக்கும் நடைபெற்ற திருமணத்தை ரத்த செய்ய வேண்டும். திருமணத்திற்கு மீறிய தொடர்பில் இருப்பது மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும், தற்போது விஜய்யின் வீட்டிற்கு வருவதற்கும் தங்களை அனுமதிக்கவில்லை என பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
சங்கீதாவின் தந்தை சொர்ணலிங்கம் இலங்கையைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராம். 1990ம் ஆண்டிலே 500 கோடி அளவிற்கு சொத்துக்களும் வைத்துள்ளார்.
மேலும் லண்டனிலும் தொழில் செய்து வரும் இவர், சங்கீதாவின் திருமணத்தின் போதே சென்னைக்கு வந்துள்ளார். விஜய்யுடன் வசித்தும் வந்துள்ளார்.
தொழிலதிபர் குடும்பத்தினைச் சேர்ந்த சங்கீதாவின் சொத்து மதிப்பு மட்டும் 400 கோடி இருப்பதாகவும், லண்டனிலும் பல கோடி மதிப்பில் வீடு நிலம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
