மீண்டும் கழுத்தில் தாலியுடன் சமந்தா.. திருமணத்திற்கு பின் வெளியான முதல் புகைப்படம்
மீண்டும் சமந்தா கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் பெரிதாக படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் நாட்கள் செல்ல செல்ல டாப் ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என பிறமொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சினிமாவுக்கு் ஓய்வு கொடுத்து விட்டு, போட்டோ ஷூட்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் எடுக்கும் புகைப்படங்களை நாட்கள் இடைவேளையில், சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். அதே போன்று பல துறைகளிலும் முதலீடு செய்திருக்கிறார்.
இதற்கிடையில், சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின.
அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்னர் விமான நிலையத்தில் கழுத்தில் மஞ்சள் தாலி போட்டியிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்ங்கில் இருக்கிறது.
