ரசிகர்கள் எதிர்பார்த்த பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா.. பங்குபெறப்போகும் முக்கிய நடிகர்கள்!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
தற்போது சிவகார்த்திகேயன் 25வது படமான பராசக்தி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அதாவது, ஜனவரி 14-ந் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, வரும் ஜனவரி 4ந் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை திருச்சி அல்லது மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விழாவில் ரஜினி மற்றும் கமல் பங்கு பெற உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.