வக்கிரம் புடிச்சவங்க கையில் AI!! டீப் ஃபேக் புகைப்படத்தால் கொந்தளித்த நடிகை ராஷ்மிகா..
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். கிளாமர் ரோலில் நடிகை ராஷ்மிகா நடித்து வந்தாலும், ஏஐ மூலமாக டீப் ஃபேக் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களால மிகப்பெரிய தொல்லைக்கு ஆளாகியிருக்கிறார்.

நடிகைகளை சிலர் ஏஐ மூலம் அழகாக காட்டினாலும் பலர் ஆபாசமாக ஆடைகளை குறைத்தும் நிர்வாணமாக மாற்றி எடிட் செய்து இணையத்தில் பகிர்கிறார்கள். இதனால் மனமுடைந்த ராஷ்மிகா, ஆரம்பத்தில் இருந்தே ஏஐ எடிட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
கவர்ச்சி மாடல் மோசமான உடையுடன் இருக்கும் லிப்ட் வீடியோவில் தனது முகத்தை எடிட் செய்து வெளியிட்ட போதே அதற்கு எதிராக சைபர் கிரைமில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், அவரை வைத்து சமீபத்தில் காக்டெயில் படத்தில் பிகினி ஆடையில் நடிக்கிறார் ராஷ்மிகா என ரூமர்கள் கிளம்பின. இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில், ஏஐ ஒரு நல்ல வளர்ச்சி பாதைக்கு சாவியாக இருக்கலாம், ஆனால், வக்கிர புத்திக் கொண்டவர்கள் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான மோசமான ஆயுதமாக மாற்றி வருகிறார்கள்.
வருங்காலத்தில் இணையத்தில் வரும் எந்தவொரு விஷயங்களும் உண்மையானதாக இருக்காது. ஜோடிக்கப்பட்ட ஃபேக் எடிட்டாகவே இருக்கும். இதனை சைபர் கிரைம் டிபார்ட்மெண்ட் இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்றும் தவறு செய்பவர்களுக்கு மறக்க முடியாத தண்டையை கொடுக்க வேண்டும் என்று கொந்தளித்து அந்தப் பதிவினை பகிர்ந்துள்ளார்.