நாக்கிலே குங்குமப்பூன்னு சொல்லுங்க!! வற்புறுத்திய பெண்ணுக்கு பதிலடி கொடுத்து கலாய்த்த ஷாருக்கான்..

நாக்கிலே குங்குமப்பூன்னு சொல்லுங்க!! வற்புறுத்திய பெண்ணுக்கு பதிலடி கொடுத்து கலாய்த்த ஷாருக்கான்..

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சொத்துக்களை வைத்திருக்கும் டாப் 1 நடிகராகவும் திகழ்ந்து வருபவர் தான் ஷாருக்கான். தற்போது கிங் படத்தில் நடித்து வரும் ஷாருக்கான், இடையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.

சமீபத்தில், பிரபல தொழிலதிபர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்து கொண்டு மணமக்களுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் பரவியது.

நாக்கிலே குங்குமப்பூன்னு சொல்லுங்க!! வற்புறுத்திய பெண்ணுக்கு பதிலடி கொடுத்து கலாய்த்த ஷாருக்கான்.. | Srk Handles Awkward Moment With Humour Viral Video

இதனையடுத்து, ஒரு பெண் ரசிகை ஷாருக்கானிடம் வந்து, பிரபல பான் மசாலா விளம்பரத்தில் வரும், நாக்கிலே குங்குமப்பூ(Zubaan Kesari) என்ற டயலாக்கை கூறும்படி வற்புறுத்தி கேட்டுள்ளார்.

இதனால் அரங்கமே சிரிப்பலையில் இருந்ததை அடுத்து அதற்கு ஷாருக்கான் தன்னுடைய பாணியில் கலாய்த்து பதிலடி கொடுத்துள்ளார்.

அதற்கு ஷாருக்கான், இந்த தொழிலதிபர்களிடம் நீங்கள் ஒருமுறை பிசினஸ் செய்தால், அவர்கள் உங்களை ஒருபோதும் விடமாட்டார்கள் என்று தனக்கே உரிய பாணியில் கலாய்த்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News