சூர்யா கொடுத்த பரிசு.. நெகிழ்ச்சியான குழந்தையின் தந்தை.. அழகிய வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு வயது குழந்தைக்கு நடிகர் சூர்யா கொடுத்திருக்கும் சர்ப்ரைஸ் பற்றிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

இப்படத்தில் சூர்யாவின் இணைந்து நடிக்கும் நடிகரின் மகனுக்கு முதல் பிறந்தநாள் என்பதால், அந்த குழந்தைக்கு ஒரு தங்க செயினை பரிசாக வழங்கியிருக்கிறார் சூர்யா.
அந்த வீடியோவை குழந்தையின் அம்மாவே தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பரிசை விட சூர்யா தங்களிடம் அன்பு காட்டியது தான் பெரிய விஷயம் என அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.