அதே 4 ஸ்டெப் இன்னும் மாறல!! ஆடலும் பாடலும் நடனத்திற்கு திரும்பிய பிக்பாஸ் ரம்யா ஜோ..
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. இவர் தான் டைட்டில் வெல்வார் என்று ரசிகர்கள் கணிக்கும் அளவிற்கு பிக்பாஸ் போட்டியாளர்கல் இதுவரை விளையாடவில்லை என்ற கருத்து தற்போது வரை எழுந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட்டாகி வெளியேறிய ரம்யா மற்றும் வியானா இருவரும் பல நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் ஆட்டம் போட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரம்யா ஜோ, தற்போது மீண்டும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறார்.

சமீபத்தில் அவர் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி, தலைவி கம்பேக் என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.