பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர்.. யார் தெரியுமா? பரிசு தொகை 35 லட்சம்
பிக் பாஸ் 9 தெலுங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஐந்து போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதில் சஞ்சனா கல்ராணி, இம்மானுவேல், டீமன் பவன், கல்யாண் படலா மற்றும் தனுஜா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு வந்தனர்.
இந்த ஐவரில் இருந்து மக்களிடம் அதிக வாக்குகளை பெற்ற கல்யாண் படலா பிக் பாஸ் 9 தெலுங்கு டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். இவருக்கு ரூ. 35 லட்சம் பரிசு தொகையுடன் சேர்த்து மாருதி சுசுகி விக்டோரிஸ் கார் வழங்கப்பட்டுள்ளது.
