சிறகடிக்க ஆசை ரோகினிக்கு இவ்வளவு பெரிய மகனா!! வைரலாகும் ஃபேமில் புகைப்படம்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. தற்போது சிறகடிக்க ஆசையில் ரோகினியை வைத்து தான் சீரியலின் கதை நகர்ந்து வருகிறது.
கிரிஷை வைத்து பல பொய்களை கூறியும் அதை தெரிந்துகொண்ட மீனா, உண்மையை மறைத்து வருகிறார். ஆனால் கிரிஷை மட்டும் வீட்டிற்குள் கொண்டு வந்து மனோஜுடன் சேர்த்துவைக்க திட்டமிட்டு வருகிறார் ரோகினி.

இந்த சீரியலில் ரோகினி ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார் நடிகை சல்மா அருண். தற்போது சல்மா அருணின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சல்மா அருண்.




