அந்த நேரத்தில் உடலுறவு வைத்தால்.. ரசிகரின் மோசமான கேள்விக்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பகீர் பதில்..
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் 'அட்ஜெஸ்ட்மெண்ட்' எனும் வார்த்தை அடிக்கடி பேசப்படும் ஒன்று. பல நடிகைகள் இதுபோன்ற அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர்.
நயன்தாரா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்கள். இந்நிலையில், 'பாக்கியலட்சுமி' மற்றும் 'கார்த்திகை தீபம்' போன்ற பிரபல சீரியல்களில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியும் இதுபோன்ற கேள்வியை எதிர்கொண்டுள்ளார்.
ரசிகர் ஒருவர் ரேஷ்மாவிடம் நேரடியாக, "அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறீர்களா?" என்று கேட்டுள்ளார். இதற்கு ரேஷ்மா மிகவும் நிதானமாகவும், தைரியமாகவும் பதிலளித்துள்ளார்.
"நான் அட்ஜெஸ்ட்மெண்ட் ஒருபோதும் செய்ததில்லை. ஒருவேளை அப்படி செய்திருந்தால், இந்நேரம் நான் எங்கேயோ (டாப் லெவலுக்கு) போயிருப்பேன். ஆனால், நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன். என்னுடன் நடித்த ஒரு நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால், இப்போது அது தொடரவில்லை" என்று கூறியுள்ளார்.
இதன் மூலம், வாய்ப்புக்கா நடிகைகள் படுக்கைக்கு அழைக்கப்படுவது உண்மை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் அம்மணி. மேலும், தன்னை அழைத்த போது, அவர்களுடன் உடலுறவு வைத்தால் டாப் லெவலுக்கு செல்ல முடியும் என்றாலும், அதனை மறுத்தேன் என வெளிப்படையாக மறுத்துள்ளார்.
மேலும், தன்னை 'ஆண்டி' என்று அழைப்பது பற்றி கவலைப்படுவதில்லை என்றும் ரேஷ்மா தெரிவித்துள்ளார். "எனக்கும் வயது ஆகிவிட்டது. எனக்கு ஒரு மகன் இருக்கிறான். பிறகு ஏன் 'ஆண்டி' என்று அழைத்தால் கவலைப்பட வேண்டும்? இது தான் வாழ்க்கையின் யதார்த்தம்" என்று எதார்த்தமாகப் பேசியுள்ளார்.
ரேஷ்மா பசுபுலேட்டி, விமான பணிப்பெண்ணாக பணியாற்றிய பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், பின்னர் நடிகையாகவும் உருவெடுத்தவர். 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் 'புஷ்பா' கேரக்டரில் நடித்து பிரபலமானார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 3 போட்டியாளராகவும் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இவரது இந்த வெளிப்படையான பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திறமையாலும், தைரியத்தாலும் முன்னேற முடியும் என்பதற்கு ரேஷ்மா ஒரு உதாரணம்!