அருள்வான் திரை விமர்சனம்

அருள்வான் திரை விமர்சனம்

அருள்வான்

கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் நடிப்பில் கல்வியில் முக்கியத்துவம் குறித்து வெளிவந்துள்ள இந்த அருள்வான் வெற்றிவாகை சூடினாரா? பார்ப்போம்.

 

கதைக்களம்

ஆரவ், ரம்யா பாண்டியன் அவர்களுடைய மகள் குறிஞ்சி ஆகியோருடன் 20+ குடும்பங்கள் மலைவாழ் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். மலையில் கிடைப்பதையே வைத்து தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கின்றனர்.

இவர்கள் கூட்டத்தில் ஒருவருக்கு கூட எழுத படிக்க தெரியாது, அதோடு பள்ளிக்கூடம் என்றாலே என்ன என்று தெரியவில்லை, அப்படியிருக்க ஆரவ் மகள் குறிஞ்சுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. அதோட குறிஞ்சி தாத்தாவை ஏமாற்றி பாரஸ்ட் ஆபிஸர் ஜான் விஜய் அவர்கள் வாழும் இடத்தை அபகரிக்க பார்க்க, குறிஞ்சி தாத்தா குற்ற உணர்ச்சியில் இறக்கிறார்.

இதனால் குறிஞ்சி கண்டிப்பாக படிக்க வேண்டும் என கங்கனம் கட்ட, அதே இடத்திற்கு கலேக்டராக அருள்நிதி வர குறிஞ்சிக்கு படிப்பு கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

அருள்வான் திரை விமர்சனம் | Arulvan Movie Review

படத்தை பற்றிய அலசல்

ஆரவ் அவர் மனைவி ரம்யா பாண்டியன் இவர்களுடைய மகள் குறிஞ்சுயுடன் படத்தில் நடித்த அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், ஆரவ்-லாம் அப்படியே காடு, மலை ஏறுகின்ற மலைவாழ் மக்களாகவே தான் பல இடங்களில் தெரிகிறார்.

அதோடு குறிஞ்சியாக நடித்த சிறிமி அத்தனை யதார்த்தம் சிறப்பான நடிப்பு, அருள்நிதி ஒரு Extended Cameo ஆக வந்து செல்கிறார், அவரும் கலேக்டர் ஆக தன் பங்கை சிறப்பாக செய்ததோடு ஒரு அரசு அதிகாரி சரியாக இருந்தால் எத்தனை நன்மைகள் நடக்கும் என்பதை அழகாக இயக்குனர் அவர் வழியே காட்டியுள்ளார்.

அருள்வான் திரை விமர்சனம் | Arulvan Movie Review

 

பிறகு ஜான் விஜய் கொஞ்ச நாள் அவரை இந்த மாதிரி கதாபாத்திரம் கொடுப்பதை நிறுத்துங்கள், இவர் வந்தாலே இதை தான் செய்வார் என்ற மைண்ட் செட் ஆடியன்ஸுக்கே வந்து விடுகிறது.

படத்தின் முதல் பாதி மலைவாழ் மக்களின் வாழ்க்கையாகவே கடந்து செல்கிறது, பல மலைவாழ் படங்களில் பார்த்த போலிஸ் அரஜாகம் ஏமாற்றம் என்றில்லாமல் அவர்களிம் சடங்குகளை காட்டிய விதம் வித்தியாசம், அதே நேரத்தில் கதையாக பெரிய சுவாரஸ்யம் முதல் பாதியில் இல்லை.

ஆனால், அதுவே இரண்டாம் பாதியில் குறிஞ்சி படிப்பிற்காக ஓடி வருவது, அருள்நிதியை சந்திப்பது அதன் பிறகு மக்களின் குறை அறிய அவர்கள் இடத்துக்கே செல்ல வேண்டும் என்பதை காட்ட, அருள்நிதி குறிஞ்சி கிராமத்துக்கே செல்வது, ஒருவரின் படிப்பு ஒரு ஊரையே எப்படி மாற்றும் என்ற காட்சிகள் அனைத்தும் அருமை.

டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவாளருக்கு எத்தனை விருதுகளையும் கொடுக்கலாம், காடு, மழை என அவர் காட்டிய காட்சிகள் கண்களுக்கு விருந்து, ஜிவி பிரகாஷ் இசையும் நன்று.

அருள்வான் திரை விமர்சனம் | Arulvan Movie Review

க்ளாப்ஸ்

படத்தின் கதை மற்றும் களம் நடிகர்கள் பங்களிப்பு படத்தின் இரண்டாம் பாதி

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம். கொஞ்சம் டாக்குமெண்ட்ரி பீலில் கமர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கு தோன்றும்.

மொத்தத்தில் அருள்வான் கண்டிப்பாக கல்வியின் அருமையை ஆழமாக சொன்னதற்கே இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து, பார்க்க வேண்டிய படம்.

3.25/5 

LATEST News

Trending News