ஹீரோயின்கள் கண்டபடி ஆடையணிந்தால் உங்களுக்கு தான் பிரச்சனை!! நடிகரின் சர்ச்சை பேச்சு..

ஹீரோயின்கள் கண்டபடி ஆடையணிந்தால் உங்களுக்கு தான் பிரச்சனை!! நடிகரின் சர்ச்சை பேச்சு..

பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் உருவாகியுள்ள தண்டோரா படம் நாளை டிசம்பர் 25 ஆம்தேதி ரிலீஸாகவுள்ளது. சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது நடிகர் சிவாஜி பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகியது. நிகழ்ச்சியில் பேசி சிவாஜி, பெண்களின் ஆடைகள், கிளாமர் மற்றும் சுதந்திரம் குறித்து தன்னுடைய தனிப்பட்ட பார்வையை பகிர்ந்தார்.

ஹீரோயின்கள் கண்டபடி ஆடையணிந்தால் உங்களுக்கு தான் பிரச்சனை!! நடிகரின் சர்ச்சை பேச்சு.. | Shivaji Faces Backlash On Women S Clothing Video

அதில், பெண்களின் அழகு சேலையில் தான் தெரிகிறது. அங்கங்கள் தெரியும்படி உடைகள் அணிவது பிரச்சனையை வரவழக்கும். ஹீரோயின்கள் கண்டபடி ஆடைகள் அணிந்தால் நீங்கள் தான் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். என்னை தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம், நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை.

உங்கள் அழகு சேலையில்தானே தவிர அங்கங்கள் தெரியும்படி அணியும் ஆடையில் இல்லை, சுதிரந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கள் பெண்களை கட்டுப்படுத்தும் மனநிலை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு சின்மயி உள்ளிட்ட பல பிரபலங்கள் சிவாஜி பேச்சை கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது நடிகர் சிவாஜி அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News