கொஞ்சம் மனசு வெச்சு வாங்க.. குடும்பத்தினரிடம் கெஞ்சிய பிக்பாஸ் அரோரா..வீடியோ..

கொஞ்சம் மனசு வெச்சு வாங்க.. குடும்பத்தினரிடம் கெஞ்சிய பிக்பாஸ் அரோரா..வீடியோ..

நடிகர் விஜய் சேதியால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் FJ மற்றும் ஆதிரை வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் விட்டிற்குள் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே அமித், கமருதீன், கனி, விக்கல்ஸ் விக்ரம், திவ்யா, சுபிக்‌ஷா உள்ளிட்டோரின் குடும்பத்தினர் வந்த நிலையில், பார்வதியின் உறவினர்கள் 24 மணி நேரம் பிக்பாஸ் வீட்டில் இருக்கப்போகிறார்கள்.

கொஞ்சம் மனசு வெச்சு வாங்க.. குடும்பத்தினரிடம் கெஞ்சிய பிக்பாஸ் அரோரா..வீடியோ.. | Biggbosstamil9 Aurora Cried And Begged Her Family

இந்நிலையில் போட்டியாளர் அரோரா ஒரு கேமரா முன் நின்று பேசியுள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தன்னுடைய நட்பு வட்டாரத்தில் இருந்து யாராவது வருவார்களா? என்று ஏங்கியுள்ள அரோரா, எல்லாருடைய குடும்பமும் வருகிறார்கள். பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் எனக்கு குடும்பம் இல்லை, எனக்கு தோழி தான் உள்ளார்.

என் குடும்பத்தினரிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான், கொஞ்சம் மனசு வச்சு வாங்களேன், அப்பா உங்களை இங்கு பார்க்க வேண்டும் என்று இருக்கு, அம்மா, அக்கா, குழந்தைகள் எல்லாரும் வந்தால் நன்றாக இருக்கும் என்று கெஞ்சி பேசியுள்ளார் அரோரா. இதற்கு பலரும் அரோராவிற்கு ஆதரவாகவும் ஆறுதல் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

LATEST News

Trending News