அடேங்கப்பா... 2025ல் மட்டும் இத்தனை தமிழ் சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா? முழு லிஸ்ட் இதோ

அடேங்கப்பா... 2025ல் மட்டும் இத்தனை தமிழ் சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா? முழு லிஸ்ட் இதோ

முடிவுக்கு வந்த சன் டிவி சீரியல்கள்

ரஞ்சனி

நட்பை மையமாக வைத்து சன் டிவியில் இந்த ஆண்டு புத்தம் புதியதாய் தொடங்கப்பட்ட சீரியல் தான் ரஞ்சனி. ஓவர் பில்டப் போடு ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல் 151 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது.

புன்னகை பூவே

ஹீரோயினை மையமாக வைத்து 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சன் டிவியில் தொடங்கப்பட்ட புன்னகை பூவே சீரியல் 9 மாதங்களில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் மொத்தம் 319 எபிசோடுகள் ஒளிபரப்பானது.

செவ்வந்தி

கணவனை இழந்த பெண் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டங்களை சொன்ன சீரியல் தான் செவ்வந்தி. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது.

ராமாயணம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராமாயணம் என்கிற டப்பிங் சீரியலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்தது.

முடிவுக்கு வந்த விஜய் டிவி சீரியல்கள்

Image Credit : Instagram

முடிவுக்கு வந்த விஜய் டிவி சீரியல்கள்

பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல் ஆன பாக்கியலட்சுமி இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. ஐந்து ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வந்த இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக 1469 எபிசோடுகள் ஒளிபரப்பானது.

நீ நான் காதல்

கணவன் மனைவி இடையேயான காதலை மையமாக வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் நீ நான் காதல். 2023 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் 384 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.

ஆஹா கல்யாணம்

விஜய் டிவியில் விக்ரம் ஸ்ரீ நாயகனாக நடித்து வந்த சீரியல் தான் ஆஹா கல்யாணம். 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் 600 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது.

தங்கமகள்

நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி ஹீரோவாக நடித்த சீரியல் தான் தங்கமகள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் 477 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது.

இது தவிர பொன்னி, வீட்டுக்கு வீடு வாசப்படி, பனி விழும் மலர்வனம் ஆகிய சீரியல்களும் இந்தாண்டு நிறைவடைந்தன.

முடிவுக்கு வந்த ஜீ தமிழ் சீரியல்கள்முடிவுக்கு வந்த ஜீ தமிழ் சீரியல்கள்

2025 ஆம் ஆண்டு அதிக சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்த தொலைக்காட்சி என்றால் அது ஜீ தமிழ் தான். அதில் ஒளிபரப்பாகி வந்த மாரி, மௌனம் பேசியதே, வள்ளியின் வேலன், ராமன் தேடிய சீதை, நினைத்தாலே இனிக்கும், மனசெல்லாம், நினைத்தேன் வந்தாய், இதயம் போன்ற மெகா தொடர்களும் இந்த ஆண்டு மூடு விழா கண்டன.

மீனாட்சி சுந்தரம்மீனாட்சி சுந்தரம்

அதேபோல் இந்தாண்டு தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு சீரியலும் இருக்கிறது. அந்த சீரியல் ஒளிபரப்பான நூறாவது எபிசோடிலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சீரியலின் பெயர் மீனாட்சி சுந்தரம். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் எஸ்.வி சேகர் நாயகனாகவும், ஷோபனா நாயகியாகவும் நடித்திருந்தனர்

LATEST News

Trending News