குழந்தைகளுடன் ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா! குவியும் லைக்குகள்

குழந்தைகளுடன் ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா! குவியும் லைக்குகள்

நடிகை நயன்தாரா இந்த நத்தார் பண்டிகையை தனது காதல் கணவர் விக்கி மற்றும் அன்பு குழந்தைகளுடன் அசத்தலாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கிறார்கள்.

குழந்தைகளுடன் ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா! குவியும் லைக்குகள் | Nayanthara Family Christmas Clicks Goes Viral

நானும் ரௌடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தார்கள். அதன்பின் 6 ஆண்டுகள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர்.

அதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

குழந்தைகளுடன் ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா! குவியும் லைக்குகள் | Nayanthara Family Christmas Clicks Goes Viral

திருமணமான அதே ஆண்டு வாடகை தாய் மூலம் நடிகை நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார். தாயான பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா அறியப்படுகின்றார்.

குழந்தைகளுடன் ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா! குவியும் லைக்குகள் | Nayanthara Family Christmas Clicks Goes Viral

சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.

குழந்தைகளுடன் ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா! குவியும் லைக்குகள் | Nayanthara Family Christmas Clicks Goes Viral

இந்நிலையில் நத்தார் பண்டிகையை குடும்த்துடன் வெகு விமர்ச்சையாக கொண்டா நயன்தாரா தனது சமூக ஊடக பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.  

LATEST News

Trending News