ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கைது செய்யப்பட்ட ரசிகர்.. ஷாக்கிங் சம்பவம்
நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
பல மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெற்றன. இறுதியாக தளபதி விஜய் அரைமணி நேரம் பேசினார்.

பிரம்மாண்டமாக நடந்த இந்த இசை வெளியீட்டு விழா நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் குறித்த தகவல் தான் வந்துள்ளது.
அதாவது இசை வெளியீட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியோ, அரசியல் பற்றிய பேச்சோ இருக்க கூடாது என போலீசார் கண்டிஷன் போட்டனர்.

ஆனால் ஒரு ரசிகர் தமிழக வெற்றிக் கழக கொடி காட்ட இப்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.