பாண்டியன் ஸ்டோர்ஸ் பழனியின் மனைவியா இது!! ராஜ்குமாரின் ஃபேமிலி அவுட்டிங்..
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்து பிரபலமானவர் தான் நடிகர் ராஜ்குமார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனி ரோலில் நிரோஷாவின் தம்பியாக நடித்து வருகிறார்.
இதற்கு முன் பாரதி கண்ணம்மா, அக்னி நட்சத்திரம், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தும் சண்டிவியில் வள்ளி சீரியலில் நடித்தும் பிரபலமானார். மேலும் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற சீரியலில் நடித்து குழந்தைகள் மனதையும் ஈர்த்தார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், என் மனைவியும் மகளும் ஊர்ல இருக்காங்க, வாரத்துக்கு ஒருமுறை தான் போய் பார்க்கமுடியும். அவர்களை பார்க்காமல் இருக்கிறது அந்த ஒரு வாரமே ரொம்ப கஷ்டமா இருக்கும் என்று கூறியிருந்தார்.
தற்போது தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ராஜ்குமார்.