அஜித் மனைவியின் தங்கை ஷாமிலியா இது!! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா?
1990ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை ஷாமிலி.

தனது அக்கா நடிகை ஷாலினிக்கு பிறகு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ஷாமிலி. பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி, 2009ல் ஓய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
ஒருசில படங்களில் மட்டும் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஆர்வத்தை ஈடுப்படுத்தி வந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாமிலி, அஜித் கலந்து கொண்டிருக்கும் கார் ரேஸிங்கை ஆவலுடன் பார்த்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷாமிலி.