ரூ.1000 கோடி பட்ஜெட்!! வாரணாசி படத்துக்கு பிரியங்கா சோப்ரா சம்பளம் இவ்வளவா?
இயக்குநர் எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் செலவில் உருவாகி வரும் படம் தான் வாரணாசி. இப்படத்தின் டைட்டில் லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது.

இப்படத்தின் ஹீரோயினாக தீபிகா படுகோன், ஆலியா பட் கமிட்டாகி வெளியேறிய நிலையில், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் ஹீரோயினாக திகழ்ந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா கமிட்டாகினார். நிகழ்ச்சிக்கு கூட அவர் பிரமாண்டமுறையில் வந்தார்.
இந்நிலையில் வாரணாசி படத்திற்காக நடிகை பிரியங்கா சோப்ரா, ரூ.30 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வாரணாசி படம் 2027ல் பிரமாண்டமான முறையில் வெளியாகவுள்ளதாக படக்குழுவும் தெரிவித்துள்ளனர்.