உலகத்திலேயே இப்போது சந்தோஷமான நபர் எனது கணவர் தான்... தொகுப்பாளினி மணிமேகலை பதிவு

உலகத்திலேயே இப்போது சந்தோஷமான நபர் எனது கணவர் தான்... தொகுப்பாளினி மணிமேகலை பதிவு

தமிழ் சினிமாவை விட சின்னத்திரைக்கு தான் இப்போது மக்களின் பெரிய ஆதரவு இருக்கிறது. 

வாரா வாரம் புதிய படங்களின் ரிலீஸை தாண்டி எந்த தொலைக்காட்சியில் என்ன சீரியல் வருகிறது என்பதை காண தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். புதிய வருடத்தில் சன், விஜய், ஜீ தமிழ் 3 தொலைக்காட்சிகளுமே புத்தம்புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள்.

உலகத்திலேயே இப்போது சந்தோஷமான நபர் எனது கணவர் தான்... தொகுப்பாளினி மணிமேகலை பதிவு | Vj Manimegalai Latest Post About Her Husband

சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களும் செம ஹிட்டடிக்கிறது. அப்படி ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குவதன் மூலம் பிரபலமான தொகுப்பாளர்களும் உள்ளனர். 

எந்த நிகழ்ச்சி கொடுத்தாலும் ஜாலியாக கொண்டு செல்லும் ஒரு தொகுப்பாளினி தான் மணிமேகலை. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி நிறைய தனியார் நிகழ்ச்சிகளையும், வெளிநாட்டிற்கு சென்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இவர் தனது இன்ஸ்டாவில், இந்த உலகத்தில் தற்போது மிகவும் சந்தோஷமான நபர் என்றால் அது எனது கணவர் தான். நான் 10 நாட்களுக்கு வெளிநாடு செல்கிறேன், என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா என்ற சந்தோஷத்தில் இருக்கப்போகிறான் என பதிவு செய்துள்ளார்.

LATEST News

Trending News