ரவிமோகனுக்கு பதிலடி கொடுத்த ஆர்த்தி
ரவி மோகன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாக நடிகர்.
இவரின் பல படங்கள் மெகா ஹிட் ஆகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதோடு இவரின் குடும்ப படங்களுக்கு என பல குடும்ப ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ரவி தன் காதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இது எல்லோருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் சுயமரியாதை என்பது எவ்வளவு முக்கியம், அது எனக்கு தேவப்பட்டது என்பது போல் பேசினார்.
அதற்கு பதிலடி தரும் வகையில் ஆர்த்தி ஒரு போஸ்டில், சுயமரியாதை மற்றும் கொடுமை பற்றி பேசும் போது ஆதாரத்துடன் பேச வேண்டும், அப்படி பேசுபவர்களே தாங்கள் சொல்வது போல் வாழ்வதில்லை என பதிலடி கொடுதுள்ளார்.