பல வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள நடிகை அசினின் போட்டோ
தமிழில் இயக்குனர் ஜீவாவின் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அசின்.
அதன்பின் ஜெயம் ரவியுடன் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடிக்க மிகவும் பிரபலமானார். பின்னர் அவர் சூர்யாவுடன் கஜினி படத்தில் நடிக்க அப்படம் மூலம் அவர் பாலிவுட் வரை பிரபலமானார்.
பீக்கில் இருந்த போதே பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து பெண் குழந்தை பெற்றார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அசின் தனது கணவருடன் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
