முகத்தை வைத்து ஆபாச மார்பிங்!! மன உளைச்சலில் புஷ்பா பட நடிகை..சிக்கிய 42 பேர்..
பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான நடிகை அனசுயா பரத்வாஜ், ஏஐ மூலம் தன்னை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்ட 42 பேர் மீது புகாரளித்திருந்தார்.

ஆன்லைன் ட்ரோலிங், முகத்தை மாற்றி மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பரப்பிரியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் நான் மனரீதியாக உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அனுசுயா ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
தண்டோரா பட நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி, உங்கள் அழகு சேலையில்தானே தவிர உடல்பாகங்களை காட்டுவதில் இல்லை என்று பேசியதை எதிர்ந்து அனசுயா வன்மையாக கண்டித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை பகிர்ந்தார்.
இதனை தொடர்ந்து அனசுயாவை பலரும் ஆபாசமாக மார்ஃப் செய்து புகைப்படங்களை பகிர்ந்து வந்திருக்கிறார்கள்.