மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்!

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்!

நடிகர் பார்த்திபன் தனது12 ஆண்டு திருமண வாழ்க்கை குறித்தும், இரண்டாம் திருமணம் பற்றியும் சமீபத்தில் பிரபல யுடியூப் சேனலுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பாதை என்ற படத்தின் மூலம் அறிமுகமானாவர் தான் நடிகர் பார்த்தீபன். இவர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். 

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! | Actor Parthiban Open Talk About Second Marriage

இவர்,  இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர் மற்றும் கதாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். இதுவரை இவர் 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.12 படங்களை தயாரித்துள்ளார் மேலும் 14 படங்களை இயக்கியும் உள்ளார்.

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! | Actor Parthiban Open Talk About Second Marriage

பார்த்திபன் தான் இயக்குநராக அறிமுகமான  'புதிய பாதை' படத்தில் நடிகையாக நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்கள். 

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! | Actor Parthiban Open Talk About Second Marriage

ஆளால் 12 ஆண்டுகள் திருமண வாழ்க்கையின் பின்னர், ஏற்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக, 2001ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து, 43 வயதில் 2010-ம் ஆண்டு டிவி நடிகர் சதீஷ் என்பவரை நடிகை சீதா திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக இவரையும் 2006ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! | Actor Parthiban Open Talk About Second Marriage

இந்நிலையில் திருமண வாழ்க்கை குறித்து அண்மையில், பிரபல  யூடியூப் சேனலுக்கு வழங்கிய பேட்டியொன்றில், பார்த்திபன்  குறிப்பிடுகையில்,  நான் சீதாவை பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை.

சொல்லப்போனால் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். சீதாவுடன் வாழ்ந்த அந்த 12 வருடங்கள் என் வாழ்க்கையில் மிகவும் இனிமையானவை. எது நடந்ததோ அது என் வாழ்க்கையில் நன்றாகவே நடந்தது.

ஆனால், இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இப்ப இருக்கும் காலகட்டத்தில் பெண்கள், ஆண்கள் இருவருக்குமே திருமணத்தை விட சுதந்திரத்தை பெரிதாக நினைக்கிறார்கள்.

எந்த பெண்களுமே திருமணம் என்ற பெயரில் ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை, அனைவருமே சுதந்திரமாக அவர்களுடைய வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். என குறிப்பிட்டுள்ளார்.

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! | Actor Parthiban Open Talk About Second Marriage

மேலும், இப்பொழுது நான் நினைப்பது என்னவென்றால் இருவருக்கும் மனஸ்தாபம் இருந்திருந்தால் அதை 12 வருடமாக இழுத்து இருக்க வேண்டிய அவசியமில்லை.

அதை இன்னும் கொஞ்சம் முன்பாகவே முடிவு செய்து பிரிந்து இருக்கலாமே என்று தான் நான் நினைக்கிறேன்.

இருவரும் பிரிந்து இருக்கிறோமே தவிர குழந்தைகளின் திருமண விஷயத்தை இருவரும் சேர்ந்துதான் முடிவு எடுத்தோம்.

இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு வந்ததே இல்லை. மனைவி என்கின்ற ஸ்தானம் என்றும் அவருக்கு மட்டும் தான்.

என்னுடைய மீதி வாழ்க்கை சினிமாவில் மட்டும் தான் இருக்குமே தவிர திருமண வாழ்க்கையில் இருக்காது.

இதை நான் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன் மீண்டும் இந்த பேட்டியின் மூலமாக அனைவரிடமும் சொல்லிவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

LATEST News

Trending News