இங்க யாருக்கும் எதுவும் நடக்கலாம்..நான் மாற்றிக்கொண்டேன்!! நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்..

இங்க யாருக்கும் எதுவும் நடக்கலாம்..நான் மாற்றிக்கொண்டேன்!! நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்..

இயக்குநர் ரா கார்த்திக் இயக்கத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மேட் இன் கொரியா. இப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. படத்தின் பிரமோஷனுக்காக பிரியங்கா மோகன், பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இங்க யாருக்கும் எதுவும் நடக்கலாம்..நான் மாற்றிக்கொண்டேன்!! நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்.. | Priyanka Mohan About The Negative Campaign On Herசமீபகாலமாக பிரியங்கா மோகனுக்கு வெற்றிப்படம் இல்லை. குறிப்பாக அவர்மீது சோசியல் மீடியாக்கள் ட்ரோல்கள் அதிகரித்து, நடனமாடத் தெரியாது, நடிக்கத்தெரியாது என்று ஏகப்பட்ட மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டன. இதற்கு பிரியங்கா முன்பு இருந்த நிறுவனத்தில் வேலை தான் என்று அங்கிருந்து விலகினார் என்ற பேச்சுக்கள் எழுந்தது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் இணைய தாக்குதல்கள் நடந்தது குறித்து பேசியுள்ளார். அதில் பிரியங்கா மோகன், எனக்கு எதிராக இணையத்தில் வெறுப்பு பிரச்சாரம் நடந்து இருக்கிறது. இன்றும் அனைவரும் எல்லாரையும் ட்ரோல் செய்கிறார்கள். பழம்பெரும் நடிகைகள், இயக்குநர்கள் என்று அனைவருமே ட்ரோல்களுக்கு சிக்கியிருக்கிறார்கள்.

என் விஷயத்திலும் அப்படி நடக்கத்தான் செய்தது. எனக்கு எதிராக வரும் மீம்ஸ்கள், பணம் கொடுத்து உருவாக்கப்பட்டவை. என்னை பிடிக்காத ஒருவர் இதுபோன்று செய்து வருகிறார்.

இங்க யாருக்கும் எதுவும் நடக்கலாம்..நான் மாற்றிக்கொண்டேன்!! நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்.. | Priyanka Mohan About The Negative Campaign On Herஅது யார் என்று எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி எனக்கு கவலையும் இல்லை. ஆனால் அந்த கடந்த கலாத்திற்கு நான் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் அது ஒருவகையில் என்னை ஒரு நல்ல குணநலன் படைத்த மனிதராக மாற்றிக்கொள்ள உதவியது.

அதில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டே என்று தான் சொல்லவேண்டும். சினிமாத்துறை நிச்சயமற்ற ஒருதுறையாகும். இங்கே யாருக்கும் எதுவும் நடக்கலாம். ஒரு கடினமான காலக்கட்டம் வரும்போது அது நம்ம மேலும் உயர்த்தும் என்பது எனது நம்பிக்கை என்று பிரியங்கா மோகன் ஓபனாக பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News