பாரதிராஜாவை பாருங்க.. சிங்கம் மாதிரி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே.. சீக்கிரம் வாங்க இமயமே

பாரதிராஜாவை பாருங்க.. சிங்கம் மாதிரி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே.. சீக்கிரம் வாங்க இமயமே

சென்னை: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. 80களில் அவர் இயக்கிய படங்கள்தான்; பலரும் சினிமாவுக்குள் வருவதற்கு உத்வேகமாக இருந்தது. இயக்குநராக மார்க்கெட் போன பிறகு நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த வருடம் அவரது மகன் மனோஜ் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அது இயக்குநர் இமயத்தை நிலைகுலைய செய்துவிட்டது. போதாக்குறைக்கு உடல்நலமும் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் அவர்.

16 வயதினிலே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக அதுவரை செட்டுகளுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை; பாரதிராஜாதான் தென் தமிழ்நாட்டின் கிராமங்களுக்கு அழைத்து சென்றார். அதை பார்த்த ரசிகர்களோ அட நம்ம ஊர்க்காரன் படம் எடுக்கிறார் என்ற மனநிலைக்கு வந்து அவரை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

Bharathiraja s Recent Photo Sparks Concern Among Fans

வரிசையாக ஹிட்டுகள்தான்: முதல் படத்தின் வெற்றி பாரதிராஜாவை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது. உச்சத்துக்கு சென்ற பிறகு மேற்கொண்டு பொறுப்பாக மாறினார். தொடர்ந்து அவர் இயக்கிய கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்கு சீமையிலே, புது நெல்லு புது நாத்து என அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதன் காரணமாக தென்னிந்திய திரையுலகத்தில் தவிர்க்க முடியாத இயக்குநராக அவர் மாறினார்.

பாரதிராஜாவின் அறிமுகங்கள்: அதேபோல் தமிழ் சினிமாவுக்கு எக்கச்சக்க பேரை அவர் அறிமுகம் செய்திருக்கிறார். ராதா, ராதிகா, ரேவதி, பாண்டியன், கார்த்திக், நெப்போலியன், பிரியாமணி, காஜல் அகர்வால் என பலர் அவரது அறிமுகங்கள்தான். அவர் அறிமுகம் செய்தவர்களும் சளைத்தவர்கள் இல்லை. தென்னிந்திய சினிமாக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் தங்களுக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஃபார்மில் இருந்த பாரதிராஜாவுக்கு மார்க்கெட் ஒரு கட்டத்தில் அவுட்டானது.
 

உயிரிழந்த மகன்: உடனடியாக தனது ரூட்டை மாற்றிய அவர் நடிகராக கலக்கினார். பாண்டிய நாடு,குரங்கு பொம்மை என பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதை பார்த்த பிறகுதான், எப்படி அவர் இயக்கத்தில் மற்றவர்கள் சூப்பராக நடிக்கிறார்கள் என்பது பலருக்கும் புரிந்தது. நிலைமை இப்படி இருக்க அவரது மகனான மனோஜ் கடந்த வருடத்தில் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு இயக்குநர் இமயத்தை சரிய வைத்தது. தீவிரமான மன உளைச்சலில் அவர் இருந்ததாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள்.

Bharathiraja s Recent Photo Sparks Concern Among Fans

ட்ரெண்டாகும் ஃபோட்டோ: மேற்கொண்டு அவருக்கு உடல்நலமும் சரியில்லாமல் போனது. இதன் காரணமாக அவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தேவையான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டுவருகின்றன. இடையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்றெல்லாம் வதந்திகள் பரவின. அதனை குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்தார்கள். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சில நாட்களுக்கு முன்பு சென்று பாரதிராஜாவை சந்தித்திருக்கிறார். அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

அந்தப் புகைப்படங்கள் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றன. பாரதிராஜா என்றாலே அவரது திடகாத்திரமான உடலும், கனீரென்ற குரலும்தான் அடையாளம். ஆனால் இப்போதோ அவர்: ஆள் ரொம்பவே உடைந்து பார்ப்பதற்கே ரொம்பவும் பரிதாபமாக காட்சியளிக்கிறார். ரசிகர்கள் பலரும், நம்ம பாரதிராஜாவா இவரு; சிங்கம் மாதிரியான மனுஷன் இப்படி ஆகிட்டாரே என்று சோகத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES