மருத்துவமனையில் சோழனை பார்த்ததும் பதறிய நிலா, கடைசியில்.... அய்யனார் துணை சீரியல் புரொமோ

மருத்துவமனையில் சோழனை பார்த்ததும் பதறிய நிலா, கடைசியில்.... அய்யனார் துணை சீரியல் புரொமோ

அய்யனார் துணை

தமிழ் சின்னத்திரையில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல். 

சோழன் பல முறை நிலாவை ஏமாற்றி நிறைய விஷயங்களை செய்துள்ளார், அப்போதெல்லாம் அவரை எப்படியோ மன்னித்து மீண்டும் பேசிக்கொண்டு வந்தார்.

விவாகரத்து வேண்டாம் அவருடன் இணைந்து வாழலாம் என நிலா முடிவு எடுத்த நேரத்தில் திருமணத்தின் போது சோழன் ஏமாற்றி திருமணம் செய்த விஷயம் தெரிய வருகிறது.

அதைப்பற்றி அறிந்ததும் நிலா செம ஷாக் ஆகிறார், நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டும் என்கிறார்.

பின் வீட்டிற்கு வந்தவர் சோழன் தனக்கு செய்த அநியாயத்தை சொல்ல வீட்டில் இருந்த அனைவரும் ஷாக் ஆகிறார்கள். நிலா கோபத்தில் வீட்டைவிட்டு கிளம்ப இன்னொரு பக்கம் சோழன் நானும் வீட்டைவிட்டு செல்கிறேன் என காரை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார்.

எபிசோட்

இன்றைய எபிசோட் கடைசியில் சோழனுக்கு விபத்து ஏற்பட்டதாக பல்லவன் நிலாவிடம் கூற அவர் செம ஷாக் ஆகிறார்.

 

தற்போது வந்துள்ள புதிய புரொமோவில், சோழனுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்து மருத்துவமனைக்கு பதறியடித்து ஓடி வருகிறார். சோழனை கண்டதும் வலிக்குதா என கேட்க இந்த வலியை விட நீ என்னை விட்டு பிரிந்து சென்றது தான் தாங்க முடியவில்லை.

என்னை மன்னித்துவிடு என சோழன் நிலாவிடம் கூறுகிறார். பாண்டி மற்றும் சேரன், சோழனுக்காக நிலாவிடம் மன்னிக்க சொல்லி கேட்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES