மகளின் 10-th மார்க்!! பெருமையுடன் கண்கலங்கிய ஜி பி முத்து..

மகளின் 10-th மார்க்!! பெருமையுடன் கண்கலங்கிய ஜி பி முத்து..

டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமாகி யூடியூப் சேனல்களிலும் வீடியோக்களை பகிர்ந்து பலராலும் கவனிக்கப்பட்ட பிரபலமாக மாறியவர் தான் ஜி பி முத்து. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜி பி முத்து, வீட்டு பிரச்சனையில் என் குடும்பத்தை அடித்து அராஜகம் செய்வதாக கூறி வீடியோவை பகிர்ந்திருந்தார்.

மகளின் 10-th மார்க்

இந்நிலையில் தன்னுடைய மகளின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவை மிகுந்த பெருமையோடு வீடியோ ஒன்றில் பேசியதை பகிர்ந்துள்ளார். அதில் ஜிபி முத்து, என் மகள் 10ஆம் வகுப்பு பரீட்சை எழுதி இருக்காங்கன்னு எல்லோருக்கும் தெரியும். எவ்வளவு மார்க் எடுத்திருக்காங்கன்னும், நல்ல மார்க் எடுத்திருக்காளா? என்று நிறைய பேர் கேட்டுட்டே இருந்தீங்க, என் மகளே சொல்லட்டும் என்று அருகில் இருந்த மகளிடம் கேட்கிறார்.

மகளின் 10-th மார்க்!! பெருமையுடன் கண்கலங்கிய ஜி பி முத்து.. | Gp Muthu Proudly Reveals Daughter 10Th Exam Marks

 

அப்போது அவரது மகள் 331 மதிப்பெண் எடுத்திருப்பதாக கூறினார். இதன்பின் உணர்ச்சிவசப்பட்ட ஜி பி முத்து, இது எல்லோருக்கும் பெரிய மார்க் மாதிரி தெரியாமல் இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை இது ரொம்பவும் பெரிய விஷயம்.

ஏன்னா, அவ எக்ஸாம் எழுதுற நேரத்தில் நாங்கள் குடும்பமாக பெரிய பிரச்சனையில் இருந்தோம். எங்க ஊர்ல வழிப்பிரச்சனை காரணமாக என்னையும் என் குடும்பத்தையும் தாக்கினாங்க, ஹாஸ்பிட்டல், பிரச்சனைன்னு நாங்க அலைஞ்சுக்கிட்டு இருந்தோம். அந்த மனநிலையில் என் மகள் பரீட்சை எழுதி இருந்த மார்க் எடுத்திருக்கா, அதனால் இது எனக்கு ரொம்ப பெருமை. இது ஆரம்பம் தான், 12ஆம் வகுப்புல இன்னும் நல்ல மார்க் எடுப்பா என்ற நம்பிக்கை இருக்கு, இப்பவே என் மகள் எடுத்த மார்க் எனக்கு சந்தோஷம் தான் என்று மகளுக்கு ஊக்கமும் அளித்து பேசியுள்ளார் ஜி பி முத்து.

LATEST News

Trending News

HOT GALLERIES