அதிதி ஷங்கரின் “இருவர்” இசை ஆல்பம் வெளியானது... 'கண்ணம்மா' பாடல்!

அதிதி ஷங்கரின் “இருவர்” இசை ஆல்பம் வெளியானது... 'கண்ணம்மா' பாடல்!

நடிகை அதிதி ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இணைந்துள்ள புதிய இசை ஆல்பத்திற்கு 'இருவர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை 'ஜடா' படத்தை இயக்கிய குமரன் இயக்கியுள்ளார்.

இந்த ஆல்பத்தின் 'கண்ணம்மா' பாடலுக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், சூரஜ் சந்தோஷ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர்.

இந்நிலையில், இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நடிகை அதிதி ஷங்கர் பாடகியாகவும் இந்தப் பாடலில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News