கள்ளக் காதலி மகளிடம் வசமாக சிக்கினாரா கோபி?- பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த அதிரடி இதுதான்

கள்ளக் காதலி மகளிடம் வசமாக சிக்கினாரா கோபி?- பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த அதிரடி இதுதான்

தமிழ் சினிமாவில் OTT தளத்தில் அதிக படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதை தாண்டி மக்கள் அதிகம் பார்ப்பது தொலைக்காட்சிகளை தான்.

இப்போது சீரியல்களை பார்க்கும் மக்கள் கொரோனாவிற்கு பிறகு அதிகமாகியுள்ளனர் என்றே கூறலாம். விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல்.

கோபியின் கள்ளக் காதலி ராதிகாவின் மகள் மயூரி அவர் வீட்டிற்கே வந்துள்ளார். குழந்தை தன்னை அடையாளம் கண்டுவிட கூடாது என கோபி தனது குடும்பத்தை சமாளித்து ஏதேதோ செய்கிறார்.

ஆனால் கடைசியில் அந்த குழந்தை கோபியை அடையாளம் கண்டது போல் காட்டப்படுகிறது.

இன்றைய எபிசோடில் முகமூடி தலையில் துணி போட்டுக் கொண்டு குழந்தையிடம் இருந்து தப்பிக்க கோபி செய்யும் விஷயங்கள் எல்லாம் சீரியலில் செம ஹைலைட்டாக இருக்கும் என்கின்றனர்.

கோபி அவ்வளவு வேலைகள் செய்தும் குழந்தையிடம் இருந்து தப்பித்தாரா இல்லை சிக்கினாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES