வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவர் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் வெற்றிமாறன் மற்றும் ராகவா லாரன்ஸ் இணையும் படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் வெற்றிமாறன் கதையில் உருவாகும் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ’அதிகாரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ பைவ் ஸ்டார் கதிரேசன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் இந்த படம் ஒரு பான் - இந்தியா படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES