வாய் தவறி பேசிவிட்டேன்: நீதிமன்றத்தில் மீராமிதுன் மனுதாக்கல்!

வாய் தவறி பேசிவிட்டேன்: நீதிமன்றத்தில் மீராமிதுன் மனுதாக்கல்!

வாய் தவறி குறிப்பிட்ட சமுதாய குறித்து பேசி விட்டதாகவும் தன்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருப்பதாகவும் அதனால் தனக்கு ஜாமின் வேண்டும் என்றும் நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகை மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேரளாவில் இருந்த மீராமிதுனை கைது செய்தனர். அதன் பின் அவரை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் வன்கொடுமை தடை சட்டத்தில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது வாய் தவறி குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி பேசி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் எனவே என்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES