வெப் சீரிஸில் நடிக்கவரும் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை.. அட, இவரா..
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடி முடிந்த சீரியல் ஈரமான ரோஜாவே.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை அர்ச்சனா. இவர் நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், தற்போது இதழும் 'இதழும் இணையட்டுமே' என்ற வெப் சீரிசில் நடிக்கிறார்.
இந்த வெப் சீரிஸ் நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்த வெப்சீரிஸ் ஏழு பாகங்களாக வெளி வர உள்ளது.