சூப்பர் சிங்கர் போட்டியாளர்களுக்கு பென்னி தயாள் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்..
விஜய் டிவி தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீசன் 8 நேற்றுடன் நிறைவடைந்தது.
மேலும் சமீபத்தில் பிரமாண்டமாக நடந்த சூப்பர் சிங்கர் சீசன் 8 பைனல் நிகழ்ச்சியில் ஸ்ரீதர் சேனா முதல் இடத்தை தட்டி சென்றார்.
அவரை தொடர்ந்து பரத் 2ஆம் இடத்தையும், அபிலாஷ் 3ஆம் இடத்தையும் வென்றனர்.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பென்னி தயாள் சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்து விருந்துதலித்துள்ளார்.
அப்போது பாடகர்கள் அனைவரும் பென்னி தயாள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளனர்.
