சுருதியிடம் இருந்து பணப்பெட்டியை பறித்து கொண்ட சிம்பு: மீண்டும் ஒரு கண்டிஷன்!
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்றும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சியில் நிறைவடைய போகிறது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது. 3 லட்ச ரூபாயில் இருந்து ஆரம்பித்த பணப்பெட்டியின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து 15 லட்ச ரூபாய் வந்தவுடன் அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு சுருதி வெளியேறியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் சுருதியிடம் இருந்து பணப்பெட்டியை வாங்கி வைத்து கொண்ட சிம்பு, அவ்வளவு சீக்கிரம் இந்த பணப்பெட்டியை எடுத்து கொண்டு செல்ல முடியாது என்றும், இந்த பணப்பெட்டியின் மதிப்பு ரூ.25 லட்சமாக உயருகிறது என்றும், இதற்காக நீங்கள் மீண்டும் சண்டை போடலாம் என்றும் தெரிவித்துள்ளார் .

ரூ.25 லட்சம் என்று சிம்பு கூறியதை அடுத்து ஜூலி உட்பட ஒருசில போட்டியாளர்கள் பணப்பெட்டியை அடைய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இறுதியில் 25 லட்ச ரூபாய் பணப்பெட்டி யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#BBUltimate இல் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) April 3, 2022
▶ 6:30 pm Onwards..#Day63 #Promo3 #NowStreaming only on #disneyplushotstar pic.twitter.com/TBlXN0tazx