அசீமை அடுத்து ஆயிஷாவை வச்சு செஞ்ச கமல்ஹாசன்: வைரல் வீடியோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய கமல்ஹாசன் எபிசோடு காரசாரமாக இருந்தது என்பதும் அவர் அசீமை கடுமையாக கண்டித்து எச்சரிக்கை விடுத்தார் என்பதையும் பார்த்தோம். கமல்ஹாசன் என்னை ‘செஞ்சுட்டாரு’ என்று அசீமே கூறுமளவுக்கு நேற்றைய எபிசோடு பரபரப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி எந்த தவறும் செய்யாத தனலட்சுமியை குறும்படம் போட்டு காப்பாற்றிய கமல்ஹாசன், ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் உடன் விளையாடிய ஷிவினுக்கும் தனது பாராட்டுதல்களை தெரிவித்தது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நேற்று அசீமை வச்சு செய்த கமலஹாசன் இன்று ஆயிஷாவை மடக்கி மட்டகி கேள்வி கேட்டு அவர் வாயிலிருந்து உண்மையை வரவழைத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

’நீங்கள் ரட்சிதா பொம்மையை எடுத்துக் கொண்டு டால் ஹவுஸ்க்கு போனீர்களா? என கமல் கேட்டதற்கு, ஆயிஷா, ‘எனக்கு சத்தியமாக அது ரக்சிதா பொம்மை என்று தெரியாது’ என்று கூறினார். அப்போது ரக்ஷிதா விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்ட என்னுடைய பொம்மை உள்ளே வந்து இருக்கலாமே என்று கூறினார். அப்போது கமல், ‘விளையாட விரும்பாத நீங்கள் ரக்சிதா பொம்மையை ஏன் எடுத்துக் கொண்டு சென்றீர்கள், கேட்டால் அசீம் தான் எடுக்க சொன்னார் என்று சொல்கிறீர்கள் என்று கமல் கேட்க, அதற்கு ஆயிஷா, ’என்கிட்ட ரக்சிதாவின் பொம்மையை எடுத்துக் கொண்டு செல்ல யாரும் சொல்லவில்லை என்று கூறிய சில நொடிகளில் ’அசீம் தான் இந்த பொம்மையை நீ எடுத்துட்டு போ’ என கூறினார் என்று உளறினார்.

இதனையடுத்து கமல்ஹாசன், ‘அப்போ அசீமின் திட்டத்தில் நீங்கள் பங்கு எடுத்துக் கொண்டீர்கள் என கமல்ஹாசன் மடக்க அப்போது பதில் சொல்ல முடியாமல் ஆயிஷா திணறிய காட்சியுடன் இன்றைய புரமோ வீடியோ முடிகிறது.

இந்த வீடியோவில் கமலஹாசன் இன்று ஆயிஷாவை கமல்ஹாசன் வச்சு செய்ததை அடுத்து அசீம் கூட்டத்திற்கே தற்போது ஒரு கிலி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Day21 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/3K72shqLHB
— Vijay Television (@vijaytelevision) October 30, 2022