திருமணம் ஆன 15 நாட்களில் சீரியல் நடிகை சம்யுக்தாவை பிரிந்தது ஏன்?- முதன்முறையாக கூறிய விஷ்ணுகாந்த்
சின்னத்திரை பிரபலங்கள் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஸ்பெஷல் தான். அன்றாடம் அவர்களை பார்ப்பதால் மக்கள் சின்னத்திரை கலைஞர்களை நெருக்கமான உறவாகவே கருதிவிடுகிறார்கள்.
இப்போது ஒரு சின்னத்திரை ஜோடி பற்றி தகவல்கள் வர ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் சீரியல் பிரபலங்கள் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்திற்கு காதல் திருமணம் நடந்தது, பிரபலங்கள் அனைவருமே வந்து வாழ்த்து கூறி இருந்தார்கள்.
ஆனால் கடந்த சில நாட்களாகவே இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டார்கள் என்றனர், சமூக வலைதளங்களிலும் திருமண புகைப்படங்களை நீக்கி விட்டார்கள்.
இந்த விவகாரம் குறித்து விஷ்ணுகாந்த் ஒரு பேட்டியில், திருமணம் ஆகி 15 நாட்களுக்குள் காதலிக்கும் போது வராத பிரச்சனைகள் எல்லாம் வந்தது.
எங்களுக்குள் பிரச்சனை வர காரணமே சம்யுக்தாவின் அப்பா தான், திருமணத்திற்கு முன் இரண்டாம் திருமணம் செய்து இவர்களுடன் சேராமல் இருந்த அவர் திருமணத்திற்கு பின் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தார், அங்கு தான் பிரச்சனை தொடங்கியது.
அதேபோல் அவரது தோழி ஒருவர் குறித்து என்னிடம் நிறைய கூறியிருக்கிறார், காதலிக்கும் போதே அவர் என்னை பற்றி தவறாகவே கூறி வந்தார். திருமணத்திற்கு பின் அவரது நட்பு வேண்டாமே என்று கூறினேன். நான் முக்கியமா, அவர் முக்கியமா என்று கேட்டால் தோழி தான் முக்கியம் என சம்யுக்தா கூறினார்.
இப்படி தொடர்ந்து பல பிரச்சனைகள் வரவே நாங்கள் தனியாக இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார் விஷ்ணுகாந்த்.