பூஜா ஹெக்டே இடத்தை பிடித்த தனுஷ் பட நடிகை.. யார் தெரியுமா..!

பூஜா ஹெக்டே இடத்தை பிடித்த தனுஷ் பட நடிகை.. யார் தெரியுமா..!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார் பூஜா ஹெக்டே. விஜய், மகேஷ் பாபு, சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன் என இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

அடுத்ததாக மீண்டும் மகேஷ் பாபுவுடன் Guntur kaaram எனும் படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், கால்ஷீட் இல்லாத காரணத்தினால் பூஜா ஹெக்டே இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக ஷாக்கிங் தகவல் வெளிவந்தது.

இதனால் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். கதாநாயகி ரோலில் இருந்து விலகிய பூஜா ஹெக்டேவிற்கு பதிலாக வேறு யார் நடிக்கப்போகிறார் என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், பூஜா ஹெக்டே நடிக்கவிருந்த இந்த ரோலில் அவருக்கு பதிலாக வளர்ந்து வரும் தென்னிந்திய நடிகை சம்யுக்தா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூஜா ஹெக்டே இடத்தை பிடித்த தனுஷ் பட நடிகை.. யார் தெரியுமா | Popular Actress Replace Pooja Hegde In This Movie

இவர் மலையத்தில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News